நீ குளிர்ந்தா நிலம் குளிரும் அம்மையே அம்மா!-உன்னை
நினைச்சாலே மனம் குளிரும் அம்மையே அம்மா!
வாடவைக்கும் வினைகளெல்லாம் என்செயும் அம்மா-உந்தன்
வாழவைக்கும் திருக்கரங்கள் இருக்கையிலே அம்மா!
புன்னைநல்லூர் குடிகொண்ட அம்மையே அம்மா!
புகழனைத்தும் நீகொடுப்பாய் அம்மையே அம்மா!
உன்னையன்றி என் குறையை யார் அறிவாரோ?
உன்னடிகள் பற்றிநின்றார் வழி அறிவாரே!