ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ் 19
வானமளந்த வண்ண
விழியாள் எனக்கு
தானம் வழங்க
வருவாயோ?-மன
ஊனமடைந்து உயிர்வாடி
நிற்கும்
நானுமுயர வ்ழியொன்று
காட்டாயோ?
அம்மா!
புன்னைவனத்தாயே!
என்னை காப்பாயே!
நோயறுக்கும் மருந்து
நீயே!-மனப்
பேய்விரட்டும்
மந்திரம் நீயே!
தாயிருக்க வாடுவேனோ
நான்?-உன்
தயவிருக்க
வருந்துவேனோ நான்?
அம்மா!
புன்னைநல்லூர்
தாயே!-எனக்கு
புத்துணர்வூட்டுவாய்
நீயே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக